இலங்கையில்
5 வயதுக்கு உட்பட்ட 20 வீதமான சிறுவர்கள் நிறை குறைந்த நிலையில் உள்ளதாக
களனி பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவத்துறை கலாநிதி ஹரேந்திர டி சில்வா
தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்
இந்த வயதினரின் 17.3 வீதமான சிறுவர்கள் சாதாரணமாக முறையில் இயங்க முடியாத
நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
இலங்கையில் 6 மாதத்துக்கும் 2 வயதுக்கும் இடைப்பட்ட பெருந்தோட்ட பகுதியை
சேர்ந்த தமிழ் பெற்றோரின் 25 வீதமான குழந்தைகள் போசாக்கின்மையால்
பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 32 வீதமான குழந்தைகள் சாதாரண நிலைக்கு கீழ்
உள்ளனர்.
85
வீதமான தாய்மார் குழந்தைக்கு தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்துள்ளனர்.
எனினும் 75 வீதமானோர் 4 மாதங்களுக்குள் தாய்பால் கொடுப்பதை நிறுத்தி
விடுவதாகவும் ஹரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.