இலங்கையில்
எதிர்வரும் 2013ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த
அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று தகவல்
வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித்
தேர்தலை முன்கூட்டியே நடாத்துவது குறித்து ஆளும் கட்சிக்கு விவாதம்
நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஜனாதிபதித்
தேர்தலுக்கு முன்னர் நாட்டின் சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை நடாத்தத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு இடையில் சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாகாணசபைத்
தேர்தல்களின் பின்னர் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடாத்த அரசாங்கம்
உத்தேசித்துள்ளதாக குறித்த சிங்கள இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.