வேலை
நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு
குறித்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று உயர் கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா
ஊழியர்களுக்கு சவால் விடும் வகையில் உயர் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள
இத்தீர்மானத்தை அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த அறிவித்துள்ளார்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்ற போதும் அவர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபடுவதானது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய பிரச்சினையை பணி நிறுத்தம் செய்து தீர்க்க முடியாது என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமது சம்பளப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நேற்று தொடக்கம் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.