சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐ.சி.சி) ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
புதிய
தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் புதிய நட்சத்திர வீரர் வீராட் கோஹ்லி,
இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி ஆகியோர் 3 மற்றும் 4ம் இடங்களில்
உள்ளனர்.
கோஹ்லி
846 புள்ளிகளையும், டோனி 752 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். தென்
ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா 871 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.
இந்திய வீரரான கவதம் காம்பீர் 666 புள்ளிகளுடன் 17ம் இடத்திலும் உள்ளார்.
ஆனால் பந்து வீச்சில் இந்தியாவுக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு பந்து வீச்சாளரும் முதல் 20 இடங்களில் இல்லை.
தென்
ஆப்பிரிக்காவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொட்சோபே முதலிடத்திலும்,
பாகிஸ்தான் வீரர் சயீட் அஜ்மல் இரண்டாமிடத்திலும், மோர்னி மார்கெல்
மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
அணிகளுக்கான
ஒருநாள் தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடத்திலும், தென் ஆப்ரிக்கா
இரண்டாமிடத்திலும் உள்ளது. 117 புள்ளிகளுடன் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 4ம் இடத்திலும், இலங்கை 5ம் இடத்திலும், பாகிஸ்தான் 6ம்
இடத்திலும் உள்ளது.
5, 6ம் இடத்தில் உள்ள இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.