பாகிஸ்தானில் பழங்குடி பகுதியில் மீண்டும் அமெரிக்க படைகள் தாக்குதல். அல்கொய்தா தளபதி பலி.

Al-Qaeda leader Abu Yahya al-Libi target of US drone strike
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடிப் பகுதியில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டாம் நிலைத் தலைவர் அபு யாஹியா அல்-லிபி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 தாக்குதல் நடந்தபோது, அல்-லிபி தனது வீட்டில் இருந்ததாக, தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் உறுதி செய்ததாக அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

 லிபியாவைச் சேர்ந்த அல்-லிபியின் தலைக்கு ரூ. 5.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-லிபியின் வாகனம் முழுமையாகச் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதனிடையே, இஸ்லாமாபாதிலுள்ள அமெரிக்காவின் மூத்த தூதரக அதிகாரியை நேரில் அழைத்து, விமானத் தாக்குதல் குறித்து தங்களது எதிர்ப்பை பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் சட்டவிரோதமானது என்றும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now