சிறீலங்காவில்
காலல்துறையினர் சட்டத்தை செயற்படுத்தாததால் 90நிமிடங்களுக்கு ஒருபெண்
பாலியல் தொடர்பான குற்றத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
தலையீடுகள் மற்றும் காவற்துறையினர் உரிய முறையில் சட்டத்தை
செயற்படுத்தாததனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாரதூரமான குற்றச்
செயல்களுக்கு ஆளாகி வருவதாக சோசலிச மகளீர் சங்கம் தெரிவித்துள்ளது. 90
நிமிடங்களுக்கு ஒரு பெண் இலங்கையில் பாலியல் வல்லறவுக்கு
உட்படுத்தப்படுவதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
திறந்த
பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து பணத்தின் மூலம்
தீர்மானிக்கப்படும் சமூகம் உருவாக்கப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது
என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்
இதனை தெரிவித்துளு;ளார்
நாட்டில்
தினமும் 5 பெண்கள் பாலியல் வலலுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என
காவற்துறை மற்றும் நீதிமன்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற போதிலும்
உண்மையான நிலைமையானது மூன்று மடங்கு அதிகமாகும். உண்மையில் நாளாந்தம் 15
பெண்கள் பாலியல் வல்லுறவக்கு உட்படுத்தப்படுகின்றன எனவும் சமன்மலி குணசிங்க
மேலும் தெரிவித்துள்ளார்.