![]()
நமது உடல் வேலை செய்வதற்கு அன்றாடம் சக்தி தேவைப்படுகிறது. இந்தச் சக்தி நாம் உண்ணும் உணவிலிருந்தே கிடைக்கிறது.. உண்ணும் உணவு ஜீரணமடைந்து உட்கிரக்கிக்கப்பட்டு இரத்த ஒட்டத்தை அடைகிறது. இதயத்துடிப்பின் போது இவை உடல் எங்கும் பரவி உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.
|
நாம் உறங்கும் போது கூட பல்வேறு உறுப்புகளும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் அதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சக்தி செலவாகும். சிறு சிறு வேலைகள் செய்யும்போது அதற்கு ஒய்வாக இருப்பதை விட அதிக சக்தி செலவு ஆகும்.சிலர் கடுமையான வேலைகளைச் செய்வார்கள் இவர்களுக்கு அதிகப்படியான சக்தி தேவைப்படும்.இவ்வாறு உடலுக்குத் தேவைப்படும் 'சக்தி' வேலை செய்யவதற்கும் தேவைப்படும். சக்தி உண்ணும் உணவிலிருந்து கிடைப்பதால், நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும். 'கலோரி' வேலை செய்யும் போது தேவைப்படும்.
சக்தியின் கலோரி சமமாக இருந்தால் அந்த நபர் உடல் எடை ஸ்திரமாக இருக்கும். இதற்கு மாறாக உண்ணும் உணவு குறைவாக இருந்து கடுமையாக வேலை செய்தால் வேலை செய்வதற்கு அதிகப்படியான கலோரி செல்வாவதால் உண்ணும் உணவிலிருந்து பெறப்பட்டது போக, மீதி உடலின் சேமிப்பிலிருந்து பெறப்படுவதால் இவர்கள் உடல் மெலிந்து விடும். ஆனால் நாம் பார்க்க வேண்டியது உடல் பருமனாக உள்ளவர்களைக் குறித்துத் தானே. இவர்கள் உண்ணும் உணவும் அதிலிருக்கும் கலோரியும் அதிகமாக இருக்கும். மாறாக உடற்பயிற்சி வேலை செய்வது மிகவும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக பெற்ற கலோரியை இவர்கள் உடல் குறைவாகவே செலவழிப்பதால் மீதி அப்படியே சேர்ந்து சேமிக்கப்பட்டு உடல் எடை அதிரித்து உடல் பருமனாகி விடும்.
|
உடல் எடை அதிகரிப்பு பற்றிய தெளிவான விளக்கம்
Related Posts :
Labels:
மருத்துவம்