
டோனிக்கு
கடந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி
வழங்கப்பட்டது. தற்போது ஓய்வில் உள்ள இவர் காஷ்மீரில் உள்ள இந்திய,
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில்
அணித்தலைவர் பதவி குறித்து டோனி கூறுகையில், எனது விருப்பத்தின் படி,
இந்திய அணியின் அடுத்த அணித்தலைவர் தெரிவு செய்யப்படமாட்டாது. ஒருவேளை எனது
விருப்பத்தை கேட்டால், என்னையே தெரிவு செய்வேன்.
அணியை வழிநடத்த வீரேந்திர ஷேவாக், கவுதம் காம்பிர், வீராட் கோஹ்லி என்று திறமையான வீரர்கள் நிறைய பேர் அணியில் உள்ளனர்.
காஷ்மீர்
இளைஞர்கள் கிரிக்கெட் மட்டுமல்லாமல், அனைத்து வகை விளையாட்டுகளிலும்
தீவிரமாக பங்கேற்க வேண்டும். இதன் மூலம் இங்குள்ள நிலைமையில் முன்னேற்றம்
ஏற்படும். எல்லைப்பாதுகாப்பு வீரர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்
கொண்டேன்.
ரஞ்சி,
துலீப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் ஜம்மு-காஷ்மிர் வீரர்கள்
சிறப்பாக விளையாடுகின்றனர். இவர்கள் விரைவில் இந்திய அணியில் இடம்
பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
மேலும்
அவர் கூறுகையில், விரைவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்
கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்