சிறிலங்காவிடம் இருந்து மேலும் 14 உலங்கு வானூர்திகளுக்கான கொள்வனவுக் கட்டளைகள் கிடைத்துள்ளதாக ரஸ்ய நிறுவனம் அறிவித்துள்ளது.
றோசோபோறோன் எக்ஸ்போர்ட் என்ற ரஸ்ய நிறுவனத்திடம் இருந்தே சிறிலங்கா
விமானப்படை, எம்.ஐ-171 ரக உலங்குவானூர்திகள் பதின்னான்கை வாங்கவுள்ளது.
இவை உலன் உடே தொழிற்சாலையில் கட்டப்படவுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா விமானப்படை 1993ம் ஆண்டில் இருந்து எம்.ஐ- 17 உலங்குவானூர்திகளை பயன்படுத்தி வருகிறது.
தற்போது சிறிலங்கா விமானப்படையினர் 6வது உலங்குவானூர்தி அணியில் 13 தொடக்கம் 18 வரையான இந்த வகை உலங்குவானூர்திகள் உள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ரஸ்யா சென்றிருந்த போது, 10 ஆண்டுகால
அடிப்படையில் ரஸ்யா வழங்க முன்வந்த 300 மில்லியன் டொலர் கடன்திட்டத்திலேயே
சிறிலங்கா இந்த உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்யவுள்ளது.