எனது’
என்ற எண்ணக் கருவை மையமாக வைத்து அரசியல் செய்து திடீரெனக் கோடான கோடிகளை
தனக்கென ஆக்கிக் கொண்டவர்களை உருவாக்கி ‘ஆசியாவிலே வியக்கத்தக்க நாடாக’
இலங்கை மாறியுள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
தெரிவித்தார்.
இன்று ஞாயிறு கண்டியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போதே
அவர் இதைத் தெரிவித்தார். ‘உங்களுக்காக நாம்’ என்ற அமைப்பின் கண்டிக் கிளை
ஒழுங்கு செய்த கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி வை.எம்.பி.ஏ.
மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:ஆசியாவிலே
வியக்கத்தக்க நாடாக இலங்கையை மாற்றும் பணியில் பல்வேறு வித்தியாசமான
வியப்புகளை நாம் காண்கிறோம். அவற்றைப் பட்டியல்படுத்தினால் முடிக்கவியலாத
அளவு நீண்டு செல்கிறது.
உலக நாடுகள் கடலில் துறைமுகம் அமைத்து வருவது வழமை. நாம் தரையைக்
கடலாக்கி அதில் துறைமுகம் அமைத்து ஆசியாவில் ஓர் ஆச்சரியத்தை உருவாக்கி
உள்ளோம்;. அதேபோல் உலகிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் பலவற்றில்
நிமிடத்திற்கு பல விமானங்கள் தரை இறங்குகின்றன. ஹீத்ரோ விமான நிலையத்தில்
12 செக்கனுக்கு ஒரு விமானம் வீதம் மேலேறுகின்றன. அவ்வாறான நாடுகள் கூட
மேலுமொரு சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபடவில்லை. ஆனால்
கட்டுநாயக்காவில் இருந்து 30 நிமிடங்களில் ஹம்பாந்தோட்டையைச் சென்றடையக்
கூடிய தூரத்தில் மற்றொரு சர்வதேச விமான நிலையத்தை அமைத்து நாம் ஆசியாவில்
ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளோம்.
அதே போல் இரவு வேளைகளில் சுமார் இரண்டு மணித்தியாலத்தியாலங்களுக்கு ஒரு
விமானம் வீதம் வருகிறது. எமது நாட்டிற்கு சர்வதேச விமான நிலையம் இன்னொன்று
தேவையில்லை. சின்னஞ்சிறு தீவான இலங்கையின் இயற்கை வனப்பு, காலநிலை மாற்றம்,
சுவாத்தியம், சீதோஷ்ண நிலை மாற்றம் என்பவை உலக நாடுகளுக்கு மிகவும்
வியப்பானவை. இதைக் கண்டு களிக்கவே அநேக சுற்றுலாத்துறையினர் வருகின்றனர்.
தரைமார்க்கமாகச் சென்றால்தான் அது அவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். இதை
விட்டு விட்டு நாம் அதிவேக பாதை, மற்றும் உள்ளுர் விமான நிலையங்கள்
என்பவற்றை அமைத்து ஆசியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்த வுள்ளோம்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களை எடுத்து வர
வசதியுள்ள விமானம் ஒன்று கேட்டோம். அதை வாங்கித் தர மறுத்த அரசு இன்று அதை
விட சொகுசு விமானங்களைக் கொள்வனவு செய்து உள்ளுரில் வசதிபடைத்தவர்கள்
மட்டும் செல்வதற்கு வழிவகுத்துள்ளது. இந்த விமானங்களை தரை இறக்கவே
உள்ளுரில் பத்திற்கும் மேற்பட்ட விமான நிலையங்களை அமைக்க அரசு
முயற்சிக்கிறது.
ஊழல் மோசடி, பாலியல் வல்லுறவு பிழையான முறையில் முதலீட்டுவோர் போன்ற
கும்பல்கள் அரசின் கைப் பொம்மைகளாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் என்ன
தவறு செய்தாலும் அதனை மறைக்க அரச அதிகாரிகள் முன்வருகின்றனர். ஏனெனறால்
சுயாதீன ஆணைக்குழுக்கள் இன்றில்லை. அனைத்து அதிகாரமும் தனி நபரின் கையில்
குவிந்துள்ளதால் அவருக்கு நல்ல பிள்ளையாக இருந்து அவரைத்
திருதப்;திப்படுத்தினால் மட்டுமே தம்மால் நிலைத்திருக்க முடியும் என்ற
ரீதியில் அரச நிர்வாக சேவை, நீதிச் சேவை, சட்டவாக்கம் போன்ற அனைத்துமே
ஒருவரின் ஆணையின் கீழ் இருப்பதால் அங்கு சுயமான செயற்பாட்டை எதிர்பார்க்க
முடியாதுள்ளது.
நான் இராணுவத்தில் சேர்ந்த காலமான 1970களில் டொலர் ஒன்றின் பெறுமதி 4
ரூபாவாக இருந்தது. பினனர் 13.50 ஆகியது. இன்று 135 ரூபாவாகியுள்ளது. அடுத்த
ஜனாதிபதித் தேர்தலின் போது அது 300 ரூபாவாகலாம்.
இன்று றகர் விளையாட்டுக் கூட அரசியல் மயமாகியுள்ளது. ஓர் அணிக்கு 5
முதல் 10 வருடம் வரை விளையாடிய ஒருவரே அணியின் தலைவராகலாம். ஆனால், எமது
நாட்டில் முதன் முறை விளையாடுபவரே தலைவராகும் ஆசியாவின் வியப்பு உள்ளது.
கண்டி றகர் அணிக்காக விளையாடியவர்கள் இன்று தேசத் துரோகியாகக்
காட்டப்படுகின்றனர். இவ்வாறு பல்வேறு கோணங்களில் நோக்க முடியும். இவை
அனைத்தும் ஆசியாவின் வியப்பாக மாறியுள்ளது என்றார்.