கஹவத்தை, கொட்டகேத்தனை பகுதியில் மேலும் 158 வீடுகளில் குற்றச்செயல்கள் இடம்பெறக் கூடிய ஆபத்து காணப்படுவதாக பொலிஸாரின் கணிப்பில்
தெரிய வந்துள்ளது.கடந்த 19 ஆம் திகதி கொட்டகேத்தனையில் தாய், மகள்
இருவரும் வெட்டிக் குத்திக் கொலை செய்யப்பட்டு பின் வீட்டுக்கள் வைத்து
எரியூட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து கஹவத்தை பக்கம் மீண்டும் அவதானம்
கிளம்பியுள்ளது.
இப்பிரதேசத்தில் 20 பெண்கள் அச்சத்தில்
வாழ்ந்து வருவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 40
வீடுகளில் பெண்கள் மாத்திரமும், 98 வீடுகளில் விதவைப் பெண்கள் வாழ்ந்து
வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அச்சத்தில் வாழும் பெண்களுக்கும் ஆண்கள்
இன்றி வாழும் பெண்களுக்கும் பொலிஸார், பிரதேசத்தில் பாதுகாப்பு
பலப்படுத்தப்படும்வரை உறவினர்கள் வீட்டில் தங்கியிருக்குமாறு
அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அக்கம் பக்கம் குறித்து அவதானமாக
இருக்கும்படியும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த காலங்களில் கஹவத்தையில் பெண்கள்
அதிகம் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக்
கொலையுடன் இதுவரை கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 14ஆக
உயர்வடைந்துள்ளது.