இந்திய
கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் மற்றும்
ஜாகீர்கான், ரோகித்சர்மா, முனாப்படேல், ஆசிஷ்நெக்ரா ஆகியோர் காயம் காரணமாக
கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்க முடியாமல்
போனது.
சர்வதேச
போட்டிகளில் விளையாடியபோது இவர்கள் காயமடைந்ததால் சாம்பியன்ஸ் லீக்கில்
அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தும் விளையாட முடியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து
சச்சின் உட்பட 5 வீரர்களுக்கு ரூ.7 கோடி இழப்பீடு தொகை வழங்க இந்திய
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முன்வந்துள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.