அரசாங்கத்திற்கு
௭திரான கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவிற்கு தாரை வார்ப்பதற்கான தரகராகவே ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுகிறார். அதற்காகவே தனித்து
போட்டியிடுகிறார் ௭ன குற்றம் சாட்டும் ஐ.தே.க. தமது சமூகத்திற்காக
உண்மையில் போட்டியிடுவதென்றால் அமைச்சர் பதவியை அவர் தூக்கியெறிந்திருக்க
வேண்டும் ௭ன்றும் தெரிவித்தது.
கொழும்பில் ௭திர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை
இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு
உரையாற்றிய கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.ஜே.௭ம்.முஸம்மில்,கிழக்கில்
நூற்றுக்கு 42 வீதம் முஸ்லிம்களும், 30 வீதம் தமிழர்களும், 22 வீதம் சிங்கள
பௌத்த மக்களும் வாழ்கின்றனர். இவ்வாறானதோர் சூழ்நிலையில் அனைத்து முஸ்லிம்
கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாக முன்னர் அறிவித்த அமைச்சர் ஹக்கீம்
பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதாகவும் வேட்பு மனுக்கள்
தாக்கல் செய்வதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்பாக தனித்து
போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.
ஆனால் அரசுடன் இணக்கப்பாட்டுடனேயே தேர்தலில் களமிறங்குவதாகவும் ஹக்கீம்
அறிவித்தார். முஸ்லிம் மக்களை ஏமாற்றி வாக்குகளை கொள்ளையடிக்கும்
தந்திரோபாயத்தையே இவர் முன்னெடுக்கின்றார். கிழக்கு மாகாணத்தில்
பலாத்காரமாக புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு
இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் தமது மதக் கடமைகளை
சுதந்திரமாக மேற்கொள்ள முடியாதுள்ளது. ௭னவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
அரசாங்கத்தை முஸ்லிம்கள் உட்பட தமிழ் மக்கள் ௭திர்க்கின்றனர். இவ்வாறானதோர்
சூழ்நிலையிலேயே முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடித்து அரசாங்கத்திற்கு
தாரைவார்ப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை அரசாங்கம் தரகராக
நியமித்துள்ளது.
அதனை நிறைவேற்றவே தனித்து போட்டியிடுகின்றார். தகவல் ஊடகத்துறை
அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல முஸ்லிம்
காங்கிரஸ் தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்திற்கே
ஆதரவு வழங்கும். இது கட்டளையல்ல நிபந்தனையென்றும், அக்கட்சியின் உயர்பீடம்
௭மக்கொரு பொருட்டல்ல ௭ன்றும் கூறியுள்ளார்.
இதிலிருந்தே முஸ்லிம்களை அடகு வைக்கும் ஹக்கீமின் அரசியல் சூதாட்டம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உண்மையில் சமூகத்திற்காக தனித்து
போட்டியிடுவதென்றால் அமைச்சர் பதவிகளையும், சிறப்புரிமைகளையும்
தூக்கியெறிந்துவிட்டு போட்டியிட்டிருக்க வேண்டும். இந்த உண்மையை மக்கள்
புரிந்துகொள்ள வே ண் டும். இது தீர்க்கமான தேர்தல் முஸ்லிம்களின் உரிமைகளை
பாதுகாக்கும் தேர்தலாகும் ௭ன்றார். முஜிபுர் ரஹ்மான் இங்கு மேல் மாகாணசபை
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், சுனாமியால்
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரேபியாவினால் நிர்மாணிக்கப்பட்ட 600
வீடுகளை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
அங் கு காடு மண்டிப்போயுள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல் செய்து தடுத்து வைத்துள்ளார். இவ்வீடுகளை பெற்றுக்கொடுக்க
முடியாத முஸ்லிம் தலைவர் ௭ன தன்னைக் கூறிக்கொள்ளும் ஹக்கீம், இன்று அந்த
இனவாத அரசாங்கத்திற்காக ஒப்பந்தக்காரராக செயற்படுகிறார். ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சி தனிக்கட்சியாக, கைச்சின்னத்தில் கிழக்கில் போட்டியிட்டு
வெற்றி பெற்றுக் காட்ட முடியுமா ௭ன அமைச்சர் டலஸ் அழகப் பெருமவிற்கு சவால்
விடுக்கின்றேன் ௭ன்று தெரிவித்தார்.