நாடு
தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்ப அரசியலினால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு
கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த குடும்ப அரசியலுக்கு எதிராக மக்கள் அணி திரளா விட்டால் இன்னும்
சிறிது காலத்தில் நாடு சீரழிந்து விடும். எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நாட்டில் மிக விசித்திரமான ஆட்சி நடைபெறுகின்றது. மக்களின்
பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றில்
கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆளும் கட்சியினர் உரிய பதிலையும் அளிப்பதில்லை.
எனக் குற்றஞ்சாட்டியுள்ள கருணாரட்ண,
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்களினால் மக்கள் வாழ முடியாத நிலைமைக்கு
தள்ளப்பட்டுள்ளதுடன், வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளது எனவும்
தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சமாளிக்க
குறைந்தபட்சம் 7500 ரூபா சம்பள உயர்வேனும் வழங்கப்பட வேண்டும் எனவும்
கருணாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.