மன்னாரில் பாரதூரமான
சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஆளும் கட்சியினைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்
நீதவானை மிரட்டி தமக்கு சாதமான தீர்ப்பை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
குறித்த அமைச்சரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு
அரசாங்கத்தின் கடமையாகும் இதனை அவர்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை
விடுத்ததுடன், நாட்டில் இடம்பெற்று வரும் அநீதிகளுக்கு எதிராக
எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை
விடுத்துள்ளார்.
மன்னராட்சி காலங்களில் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்து நாடு முழுவதிலும்
செல்ல முடிந்தது. ஆனால் தற்போதைய மன்னராட்சி காலத்தில் பெண்கள் ஆபரணங்களை
அணிந்து அரை மைல் கூட தனியாக செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.
சிறுவர் துஸ்பிரயோகம், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் கொலைச்
சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக ரணில் விக்கிரம சிங்க
குறிப்பிட்டுள்ளார்.