மன்னாரில்
அண்மைக்காலங்களாக இடம்பெற்று வந்த கலவரங்களில் தொடர்புடையவர்கள் என
சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டிகளது சாரதிகள் சிலர் தலை
மறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மன்னார்நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன்
தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளில் பல்வேறு தரப்பினரும்
உள்ளடங்கியிருப்பதாக தெரியவருகின்றது.
மன்னார்நீதிமன்ற சூழலில் ஏற்படுத்தப்பட்ட கலவரம் மற்றும் நாசகார
நடவடிக்கைகளை கண்டித்து நாட்டின்பலபாகங்களிலும் உள்ள நீதிமன்றங்கள் தற்போது
தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டடிருக்கின்றன.
மன்னார்நகரின் பிரதான நுழைவாயிலில் அமைந்திருக்கும் நீதிமன்றத்தை
அன்மித்த பகுதியில் இம்மாதம் (18.07.2012) உப்புக்குளம்
பகுதியைச்சேர்ந்தவர்களால் நீதிமன்றிற்கும் நீதவானுக்கும்
எதிராகமுன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியிருந்தது.
மேற்படிஆர்பாட்டம் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களில்
பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் நிமிர்த்தம் நீதிமன்றினால்
தண்டிக்கப்பட்டு பிணையில் செல்ல அணுமதிக்கப்பட்டவர்கள் எனவும் தற்போது
தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில்குறித்த சம்பவத்துடன் அதிகளவில் சம்மந்தப்பட்டவர்கள் மன்னார்
நகர மத்திய பகுதியில்சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளது சாரதிகள் என
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்தசம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியேட்சகர் ஒருவர் தலமையிலான
மூன்று விசேட பொலிஸ்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கி
விடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் குற்றச்செயல்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் என
சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டிகளதுசாரதிகள் சிலர் தலைமறைவாகி
இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாகசம்பவ தினத்தன்று மாலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு
விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் தேடப்படும் குற்றவாளிகளில்
சிலர் மன்னார் நகரை விட்டு வெளியேறியிருப்பதாகவும் இன்னும் சிலர் அணைத்து
வசதிகளுடனும் மன்னாரினுள்லேயே தலைமறைவாகியிருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளைநீதிமன்றிற்கு எதிராக கலகம் ஏற்படுத்தப்பட்ட அன்றைய தினம்
(18.07.2012) காலை தொடக்கம்;சம்பவத்துடன் சம்மந்தப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டிகளின் ஓட்டுனர்கள் இதுவரையில்
முச்சக்கரவண்டி தரிப்பிட பகுதிக்கு சமூகமளிக்காமல் இருப்பதே மேற்படி
சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையேநீதிமன்றம் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள்
தொடர்பில் உரிய நடவடிக்கைஎடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடர் கதையாகவே
இருக்கும் என மன்னாரின் சிரேஷ்டசட்டத்தரணியும், மன்னார் சட்டத்தரணிகள்
சங்கத்தின் தலைவருமான இ. கயஸ் பல்டானோ தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இதுவரையில் இடம்பெற்றிராத அநாகரிக
செயல் மன்னார் நீதிமன்றின்மீது முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில்
தனது கடுமையான கண்டனத்தையும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
நாட்டின்ஜனாதிபதி இதுதொடர்பில் புலனாய்வுப்பிரிவு பொலிஸாரிடம்
விசாரணைகள் பாரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் அது
உடனடியாக அமுலுக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்மன்னார் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள்
மற்றும் நீதிமன்ற பணியாளர்கள்வாரத்தின் முதல் கடமை தினமாகிய இன்று
திங்கட்கிழமையும் (23.07.2012) தமதுபணிப்பகிஷ்கரிப்பை தொடர்வார்கள் எனவும்
எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னாரில் வடமாகாணசட்டத்தரணிகள் கண்டன ஊர்வலம் – புலணாய்வாளர்களின் விசாரணைகளும் ஆரம்பம்
மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் நீதிமன்றங்களின் மீது மன்னார்
உப்புக்குளம் பகுதியைச் சோந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும்
நாசகார செயற்பாடுகளை கண்டித்து ஊர்வலம் ஒன்றுஇடம்பெறுகின்றது.
வடமாகாணத்தைச்சேர்ந்தசட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (23.07.2012)
மன்னார் நகர நீதிமன்றிற்கு விஜயம்செய்த அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்
ஊர்வலம் ஒன்றினை நடாத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம்,
நீதிமன்ற அவமதிப்பு,நீதவான் மீதான தூசிப்புக்கள் என்பவற்றிற்கு எதிராக
நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள், மற்றும் நீதிமன்ற பணியாளர்களினால்;
பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் தற்போது நாட்டின் ஜனாதிபதி இதுதொடர்பில் புலனாய்வுப்பிரிவு
பொலிஸாரிடம் விசாரணைகள் பாரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும்
நிலையில் அது உடனடியாக அமுலுக்கு வந்திருப்பதாக தெரிகின்றது.
இதன்பிரகாரம் விசேட புலனாய்வுப்பிரிவு பொலிஸார் தமது விசாரனைகளை
மன்னாரில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதன் முதற்கட்ட விசாரணைகளை
மன்னார் நீதிமன்ற சட்டத்ரணிகள் பணியாளர்களிடம் ஆரம்பித்திருப்பதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே மன்னார் நீதிமன்ற அவமதிப்புடன் தொடர்புடைய சம்பவங்களை
கண்டித்தும், சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் கோரி
வடமாகாணத்தைச்சேர்ந்த சட்டத்தரணிகள் கண்டன ஊர்வலம் ஒன்றினை
நடாத்துகின்றனர்.
இதன்பிரகாரம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி. முல்லைத்தீவு. வுவனியா மற்றும்
மன்னார் மாவட்டங்களில் இயங்கிவரும் நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் மற்றும்
பணியாளர்கள்; கலந்து கொள்கின்றனர்.
மன்னார் நகர சபையில் நிறைவேறியது நீதிமன்ற தாக்குதல் தொடர்பான கண்டணதீர்மானம்
மன்னார் நீதீமன்றம் மீது மெற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம்மற்றும்
அதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு மன்னார் நகர
சபையில் கண்டனதீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
மன்னார் நகர சபையின் மாதாந்த கூட்டம் இம்மாதம் 19ம்திகதிநகரசபையின்
தலைவர். எஸ். ஞானப்பிரகாசம் தலமையில் இடம்பெற்ற போதே மேற்படி
தீர்மானம்நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
நகரசபையின் உறுப்பினர் ரெட்னசிங்கம் குமரேஷ் மன்னார்
நீதிமன்றம்தாக்கப்பட்டமை தொடர்பில் முன்மொழிவை வைத்து உரையாற்றுகையிலே
மேற்படி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அமைதி வழியில் என சொல்லி தொடங்கிய போராட்டம் வண்முறையில்மடிவடைந்ததற்கு
சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே காரணம் என தெரிவித்திருக்கின்றார்.
இரண்டு மீனவ சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட இந்த சர்ச்சை;
பேசிதீர்த்திருக்கவேண்டும் அல்லாவிடில் பேசித்தீர்க்கக்கூடியவர்களை அணுகி
தீர்ப்பதற்கு முயற்சிகளைமெற்கொண்டிருக்க வேண்டும்.
அதையும் தாண்டி இவ்விடையம் தற்போது நீதிமன்றம் வரையில்சென்றிருக்கின்றது.
இதுவிடயம் தொடர்பில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இரு
சமூகங்களும்கடைப்பிடித்திருக் வேண்டும். குறித்த நீதிமன்ற கட்டளைகள் ஏற்க
முடியாவிட்டால் அதனைமேன்முறையீடு செய்திருக்கவேண்டும்.
ஆனால் அதை விடுத்து நீதியையும் நீதிமன்றையும் அவமதித்தும்நீதவானை
விமர்சித்தும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நீதிமன்றத்தையே
தாக்கும்அளவிற்கு சென்றிருக்கின்றது