இவ்வருடம் டிசம்பரில் புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண் பற்றி வர்த்தமான
அறிவித்தலை விடுக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அதிகாரிகள் இதைச் செய்யாதுவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவை
எச்சரித்துள்ளன.
இந்த சுட்டெண், வாழ்க்கைச் செலவு உயர்வு, கொள்வனவு சக்தி
என்பவற்றைப்பற்றிய விளக்கத்தை அளிப்பது என தேசிய தொழிற்சங்க நிலையம்
கூறியது.
சம்பளங்கள், வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணின் அடிப்படையில்
தீர்மானிக்கப்படுவதாகவும் இது 2009இன் பின்னர் இன்னும்
வெளியிடப்படவில்லையெனவும் தேசிய தொழிற்சங்க நிலையத்தின் தலைவர்
கே.டீ.லால்காந்த கூறினார்.
விலைகள் அதிகரிக்கும் போது வாழ்க்கைச் செலவுச் சுட்டென் அதிகரிக்கும்.
இதற்கேற்ப சம்பளம் அதிகரிக்க வேண்டும். எனவே அரசாங்கம் புதிய வாழ்க்கைச்
செலவு சுட்டெண்ணை வெளியிட வேண்டுமென அவர் கூறினார்.
இவ்வருடம் ஆகஸ்டில் நான்கு பெர் கொண்ட குடும்பத்தின் மாதாந்த வாழ்க்கைச்
செலவு மாதத்துக்கு 46,392 ரூபாவாகும். இது 2007இல் 27,996 ரூபாவாக
இருந்தது. இது இப்போது அதிகரித்துவிட்டது.
புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண் வெளியிடப்படாததால் மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களின் உரிமையை மீறுவதாகும் என சங்கத்தின்
தலைவர் வசந்த சமரசிங்க கூறினார்.