ஆறு வயதுச் சிறுவன் ஒருவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புழுக்கள்
மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்
பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவர் வயிற்று
வலிகாரணமாக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்று ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது சிறுவனின் வயிற்றை சோதனை செய்தபோது வயிற்றின் பெருங்குடலில் புழு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக சிறுவனை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஜெமிலினால்
சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வயிற்றில் இருந்து 90 புழுக்களை வெளியில்
எடுக்கப்பட்டு சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இவ் புழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு அடி இரண்டு சென்ரி மீற்றர் நீளம்
கொண்டதெனவும் சிறுவனை குறித்த நேரத்திற்கு கொண்டுவந்ததால் சிறுவனின்
வயிற்றில் புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உயிர்
காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
சிறுவனுக்கு பூச்சிக்கான மருந்து எதுவும் பல ஆண்டுகள் கொடுக்காத நிலையில்
இந்த புழுக்கள் விளைய ஆரம்பித்துள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.