இலங்கையின்; சில பகுதிகளில் மர்மமான
முறையில் உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
குருணாகல் குளத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தெலியாகொன்ன
வெடருவௌ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக
காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை களு கங்கைக்கு அருகில் கெலிடோ
கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 60
வயது மதிக்கத்க்க இந்த சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக
களுத்துறை வடக்கு காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே கழுத்து நெறிக்கப்பட்டு கொலை
செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் கருவலகஸ்வௌ -
பாவட்டாமடு பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் கணவருடன்
ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என
காவற்துறையினர் கூறியுள்ளனர்.
பெண்ணை கொலை செய்த நபர் சடலத்தை மீ ஓய
பிரதேசத்திற்கு கொண்டு சென்று போட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபர் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.