ஹிந்தித் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதாக நேபாள மாவோயிஸ்டு கட்சியின் ஒருபிரிவினர் அறிவித்துள்ளனர்.
நேபாளத்தில்
மோகன் வைத்யா தலைமையிலான மாவோயிஸ்டு கட்சியினர், ஹிந்தித்
திரைப்படங்களால் அந்நாட்டில் கலாசாரச் சீரழிவு ஏற்படுவதாகக் கூறி,
அத்திரைப்படங்களை திரையிட கடந்த 10 நாள்களுக்கு முன்பு தடை விதித்தனர்.
இந்திய பதிவு எண் கொண்ட வாகனங்களை நேபாளத்துக்குள் நுழைவதற்கும் அவர்கள்
எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், கடந்த வாரம் அத்தியாவசியப் பொருள்களைக்
கொண்டு வரும் இந்திய வாகனங்களுக்கு அனுமதியளிக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில், அக்கட்சியினர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:÷
""ஹிந்துப்
பண்டிகையான விஜய தசமியை முன்னிட்டு ஹிந்தித் திரைப்படங்களுக்கான தடையை
நீக்க முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது