இந்திய அணி முன்னாள் கேப்டன் கும்ளே, ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியாவின்
ஓய்வு பெற்ற "சுழல்' ஜாம்பவான் கும்ளே, 41. மொத்தம் 132 டெஸ்டில் 619
விக்கெட்டுகள், 271 ஒரு நாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தற்போது கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
இதனிடையே,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கிரிக்கெட் கமிட்டித்
தலைவராக 2008 முதல் இருந்து வந்த வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு ஓய்வு
பெற்றார். இப்பதவிக்கு இந்தியாவின் கும்ளே, ஒரு மனதாக தேர்வு
செய்யப்பட்டார். இதன் உறுப்பினராக இருந்த வெஸ்ட் இண்டீசின் இயான்
பிஷப்பிற்கு பதில், ஓய்வு பெற்ற வீரர் இங்கிலாந்து வீரர் ஸ்டிராஸ்
நியமிக்கப்பட்டார்.
ஐ.சி.சி., தலைவர் ஆலன் இசாக் கூறியது:
இந்திய
அணியின் வீரராக மட்டுமன்றி, கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக
சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கிளைவ் லாய்டு விட்டுச்சென்ற பொறுப்புகளை,
கிரிக்கெட் கமிட்டி தலைவராக கும்ளே சிறப்பாக தொடருவார் என நம்புகிறேன்.
இவ்வாறு ஆலன் இசாக் கூறினார்.