பௌத்த விஹாரைகள் மற்றும் பௌத்தர்கள்
மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என
பங்களதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பௌத்த மக்களை மட்டுமன்றி
மிக நீண்ட வரலாற்றை உடைய பௌத்த விஹாரைகள் மீதும் கண்மூடித்தனமான
தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள்
வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான விஹாரைகளை புனரமைப்பதற்கு
அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தின்
பின்னணி குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.