ஓராண்டுகால விசாரணைகளின் பின்னரும்
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமரர் பாரத
லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 8ம் திகதி முல்லேரிய பிரதேசத்தில் வைத்து
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பாரத லக்ஸ்மன் பிரேம்சந்திர உள்ளிட்ட
நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான
விசாரணைகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இதுவரையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. தந்தையின் கொலையாளிகளுக்கு எதிராக
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் தொடர்ச்சியாக போராடுதாக ஹிருனிகா
தெரிவித்துள்ளார்.