சர்வதேச கிரிக்கட் பேரவை டுவன்ரி-20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியின் நிறைவில் சட்டம்
ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் எவரும் செயற்படக் கூடாது என
காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படக் கூடிய
வகையிலோ அல்லது வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் வகையிலோ எவரும்
செயற்படக் கூடாது என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
போட்டி நடைபெறும் காலப் பகுதியில் அல்லது
அதன் பின்னர் சாரதிகள், போக்குவரத்துக்கு இடைஞ்சலான வகையில் வாகனங்களைச்
செலுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, போட்டி நடைபெறும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விசேட நுழைவு அனுமதிப்பத்திரம் உடைய வாகனங்கள் மட்டுமே மைதானத்திற்கு அருகாமையில் தரிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
மைதானத்திற்குள் பிரவேசிக்கும் ரசிகர்கள் மிக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள், கண்ணாடியிலான போத்தல்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.