T-20 நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லையா? கவலையை விட்டு எம்முடன் இணையுங்கள்!


T-20 நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லையா? கவலையை விட்டு எம்முடன் இணையுங்கள்!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் ஒளிபரப்பு நாளை (07) CH & FC கிளப் மைதானத்தில் திரையிடப்படவுள்ளது.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறதிப் போட்டிக்கான நுழைவுச் சீட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டதாக ஐசிசி அறிவித்ததை அடுத்து பல கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் CH & FC கிளப் மற்றும் ரிவி தெரண என்பன இணைந்து இறுதிப் போட்டியை பெரிய திரையில் திரையிட நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி நாளை மாலை 6 மணி தொடக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் இருபதுக்கு இருபது இறுதிப் போட்டியை நேரில் பார்த்தது போன்றதொரு அனுபவத்தை பெற CH & FC கிளப் மற்றும் ரிவி தெரண ஆகியன அழைப்பு விடுக்கின்றன.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now