இருபதுக்கு இருபது ஐசிசி உலக அணிக்கான தலைவராக மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம்முறை இடம்பெற்ற இருபதுக்கு இருபது ஐசிசி உலக கிண்ண போட்டியில்
சிறப்பாக விளையாடிய 11 வீரர்கள் இருபதுக்கு இருபது ஐசிசி உலக அணிக்காக
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இப் 11 பேரில் இலங்கை வீரர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர். மஹேல ஜயவர்தன,
அஜந்த மென்டீஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியேர் இவ் அணியில்
இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள் ஆவர்.
இம்முறை இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தை வென்று சம்பியன் பட்டத்தை
சூடிக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் இருவர் இதில் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணி
வீரர்களும் இருபதுக்கு இருபது ஐசிசி உலக அணியில் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
இருபதுக்கு இருபது ஐசிசி உலக மகளீர் அணியில் அவுஸ்திரேலிய அணியைச்
சேர்ந்த வீராங்கனைகள் ஐவரும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வீராங்கனைகள்
நான்கு பேர் இடம்பிடித்துள்ளனர்.