ஹட்டன் மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் இறுதி போட்டியை
பார்த்த பின்னரே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹட்டன் குடாஓயா பிரதேசத்தில் 22 வயது தமிழ் இளைஞன் ஒருவர் நேற்றிரவு
கிரிக்கட் போட்டியை பார்த்து விட்டு வீடு திரும்பிய நிலையில் கழுத்தில்
சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதன்போது இவர் அதிக மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று அதிகாலை குறித்த இளைஞன் தமது வீட்டின் அருகில் இருந்த மாமரத்தில்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு குறித்த இளைஞர் கிரிக்கட் போட்டியை பார்த்துவிட்டு நள்ளிரவில்
வீடு திரும்பிய தமது புதல்வர் காலை வேளையில் வீட்டில் இல்லாமை குறித்து
அவரின் தாயார் தேடியுள்ளார்.
இதன் போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.