சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப் போட்டியை
பார்வையிடுவதற்காக 1540 ரூபா பெறுமதியான டிக்கெட்டை 14ஆயிரம் ரூபாவுக்கு
முகப்புத்தகத்தினூடாக விற்க முயன்ற 17 வயது மாணவனொருவனை பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான டிக்கெட் ஒன்றையே குறித்த மாணவர் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளான்.
வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த மாணவனொருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.