அமெரிக்காவைப் போன்று அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கொழும்பிற்கு வெளியே
சிறைச்சாலை ஒன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.வெலிக்கடைச் சிறைக் கைதிகளின் நடவடிக்கைகள் மற்றும்
அவர்களை பார்வையிட செல்வோர் தொடர்பில் கண்காணிக்க முடியாத நிலைமை
காணப்படுகின்றது. சிறைச்சாலையில் அதிகளவு சன நெரிசல் நிலவுவதனால்
கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்படுவதால்,
கைதிகளை சந்திக்க செல்வோரை வீடியோ பதிவு செய்யக் கூடிய வகையில் சிறைச்சாலை
அமைக்கப்பட உள்ளது.
இந்த அதி நவீன சிறைச்சாலையை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபா செலவாகும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.தற்போதைய நிலைமையின் காரணமாக வெளிநாட்டுக்
கைதிகளுடன் உள்நாட்டுக் கைதிகள் தொடர்புகளைப் பேணக் கூடிய சந்தர்ப்பம்
காணப்படுகின்றது என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த
வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்தே அரசு
இவ்வாறனதொரு முயற்சிக்கு திட்டம் தீட்டியுள்ளது என மேலும் அச்செய்தி
தெரிவித்துள்ளது.