we Transfer
நச் என்று இருக்கும் தள வடிவமைப்புடன் மிக இலகுவாக 2 GB அளவு வரையான file களை நண்பர்களுடன் பகிர உதவும் தளம். ரெயிஸ்டர் செய்யத்தேவையில்லை. 2 வாரத்துக்கு உங்கள் data க்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர் இவர்கள்.
flockdraw
கணணி மென்பொருட்களின் உதவி இல்லாமல் இணையத்திலிருந்தவாறே சுலபமாக படம் வரைவதற்க்கு உதவும் தளம். இது ஒரு ரியல்டைம் பெயிண்டிங் டூல்.
Mitto
இது ஒரு ஒன்லைன் பாஸ்வேட் மனேஜர். மிக பாதுகாப்பானதும் கூட. விசிட் செய்யும் அனைத்து தளங்களின் பாஸ்வேட் யூசர் நேம் விபரங்களை ஒரே இடத்தில் சேமித்து ஒரு கிளிக் இல் அனைத்தையும் லாகின் செய்ய உதவும் தளம்.
Squareleaf
ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியவற்றை சிறிய சிட்டையில் எழுதி வைத்துக் கொள்வதுண்டு அதையே இணையத்தில் செய்யவதற்க்கு Squareleaf ஐ பயன்படுத்தலாம். இது ஒரு விர்ச்சுவல் வைட்போட்.
freemypdf
சில pdf டாக்குமெண்ட் File கள் பாஸ்வேட் கொடுத்து சேமித்திருப்பார்கள். அதை சுலபமாக நீக்கி தடையின்றி pdf டாக்குமெண்ட் File ஐ திறந்து படிக்க உதவும் தளம்.
profilder
சோசல் நெட்வேர்க் தளங்களில் உள்ள Profile களை வண்ண மயமாக்க உதவும் தளம்.