ஹோட்டல்கள் மற்றும் வாடிவீடுகளிற்கு
சிறுமிகளை அனுமதிக்கும் அவ்நிறுவனங்களின் உரிமையாளர்களை கைது செய்வதற்கான
சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில
தினங்களாக இடம்பெற்று வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் மூலமாக
சிறுமிகளை ஹாட்டல்கள் மற்றும் வாடிவீடுகளிற்கு அனுமதித்த நிறுவன
உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் படி இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுமிகள் ஹோட்டல்கள் மற்றும் வாடிவீடுகளிற்கு அனுமதிக்கப்படுவார்களாயின்
அதற்கு அந்த நிறுவன உரிமையாளர்களே பொறுப்புக் கூற வேண்டும் என பொலிஸர்
தெரிவித்தனர்.
இதன் காரணமாக அவர்களிற்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என பொலிஸர் மேலும் தெரிவித்தனர்.