நாட்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் அவரது
குடும்பத்தினர் அங்கம் வகிக்கும் அமைச்சுக்களுக்காக 65 ஆயிரம் கோடி ரூபாவை
ஒதுக்கியுள்ளதாகவும் அது முழு வரவு செலவுத் திட்டத்திலும் 40 வீதமான நிதி
ஒதுக்கீடு எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ
அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஏனைய 50 அமைச்சுக்களுக்கு 60 வீதமான நிதியே
ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மற்றும்
குடும்ப உறுப்பினர்கள் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்காக 29 ஆயிரம்
கோடி ரூபாவும்இ துறைமுகம் மற்றும் பெருந் தெருக்கள் அபிவிருத்தி
அமைச்சுக்காக 13 ஆயிரத்து 161 கோடி ரூபாவும் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சுக்கு 8 ஆயிரத்து 790 கோடி ரூபாவும்இ நிதியமைச்சுக்காக 8 ஆயிரத்து
748 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க
குறிப்பிட்டுள்ளார்.