கடந்த
சில தினங்களாக இலங்கையில் முகாமிட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள
உகண்டா நாட்டு ஜானாதிபதி பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். போரில்
இறந்த இராணுவச் சிப்பாய்களில் நினைவுத் தூபிக்குச் சென்று வணக்கம்
செலுத்திய உகண்ட நாட்டு ஜனாதிபதி, பின்னர் மகிந்தரைச் சந்தித்துள்ளார்.
உகண்டாவில்
தொழில் நுட்ப்ப நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும், அங்கே இலங்கையர்களை
வேலைக்கு அமர்த்தி உகண்டா நாட்டவர்களுக்கு பயிற்ச்சி வழங்கவும் ஒப்பந்தம்
ஒன்று போடப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இலங்கை உகண்டா நாட்டிற்கு சுமார் 1.5 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துள்ளது. அரச ஊடகங்கள் இச் செய்தியை பெரிதாக பிரசுரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இதற்கு அமைவாக இலங்கை உகண்டா நாட்டிற்கு சுமார் 1.5 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துள்ளது. அரச ஊடகங்கள் இச் செய்தியை பெரிதாக பிரசுரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது