புலிகளின் 30வருட கால வரலாற்றில், இதுவரை காலமும் இலங்கையில் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிந்து மரணமடைந்தவர்களுக்கு தான் ‘மாவீரர் ’ பட்டம் அளித்து கெளரவிக்கும் நடைமுறையிருந்தது. புலிகளால் யாராவது சுட்டுக்கொல்லப்பட்டால் அவர்களுக்கு ‘துரோகி’ பட்டம் தான் வழங்குவார்கள். ஆனால், முதன்முறையாக புலிகளால் (உள்வீட்டு பிரச்சனையில்) சுடப்பட்ட புலிகளின் தளபதி ஒருவருக்கு புலிகளாலோயே ‘மாவீரர்’ பட்டம் கொடுத்துக் கெளரவித்துள்ளார்கள். எல்லாம் அதிசம்தான்.
மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் பரிதி மாவீரர் பட்டம் வாங்கியது பெரும் பேறு தானே… கிடைத்தற்கரிய கொடையல்லவா.
தலைவர் மண்டையை போட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அந்தாளுக்கு ஆகக்குறைந்தது ‘நாட்டுப்பற்றாளர்’ பட்டம் கூட வழங்க மறுப்பதுதான் ஏன் என்றுதான் புரியவில்லை. சரி, தலைவரின் உயிர் தான்போகவில்லை என்று வைத்துக்கொண்டாலும்… தலைவரின் உடலாவது இறந்து போய்விட்டது என்பதையாவது ஒத்துக்கொண்டு வெற்றுடலுக்காவது எதாவது பட்டம்கொடுத்து மரியாதை செலுத்தக் கூடாதா?
நாட்டில புலிகள் உயிர் நீர்த்த பின்பு, புலம்பெயர் தேசத்து புலிகள் தாங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக காட்டிக்கொண்டு…, ‘தமிழீழம் ’ அமைத்து தரப்போவதாக வெறும் அறிக்கை போர் மட்டுமே நடத்தி புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருவதோடு…, ஒவ்வொரு பிரிவினரும் தாங்கள் மட்டுமே ‘புனிதர்கள்’ என்று தமிழர்களை நம்பவைப்பதற்காக தங்களுக்கு தாங்களே ‘துரோகிகள்’, ‘காட்டிக்கொடுப்பவர்கள்’ , இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் என ஆளுக்காள் பட்டம் கொடுத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்கள். ஆனால் கொலை செய்யும் அளவுக்கு இதுவரை யாரும் துணியவில்லை. இப்ப தான் அவர்களுக்குள் ஒரு பகுதியினருக்கு துணிவு வந்திருக்கு. தலைவர் காட்டிய வீரமாக இதை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
மாவீரர் தினவிழாவை நடத்தி பணம் சேர்க்கவேண்டும் என்கின்ற பேராசையில் புலிக் குழுக்களிடையே நடந்த உள்ளக முரண்பாட்டில் ஒரு கொலை நடந்திருக்கின்றது. இன்னும் எத்தனை கொலைகள் நடைபெறப்போகின்றனவோ தெரியவில்லை. கனடாவில் நடக்கவிருந்த இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியில் தான் அனேகமாக கொலைகள் நடக்கலாம் என தமிழர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் இப்படி பிரான்ஸில் நடக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
தமிழர்கள் பாதுகாப்பாக வாழலாம் என நினைத்து வந்த வெளிநாட்டிலேயே வைத்தே, இப்படி பயமின்றி ஒருவரை சுட்டுக்கொலை செய்திருக்கிறார்கள் என்றால், நமது நாட்டில் இருக்கும் பொழுது இவர்கள் எத்தனை கொலைகளை செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். புலிகள் இயக்கத்தில் இருந்து நன்றாக கொலை செய்து பழக்கப்பட்டவர்கள் தான் இந்த துணிகரமாக கொலையை செய்திருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
கடைசிக்கட்டப் போர் நடந்துகொண்டிருக்கும் போது புலிகளியக்கத்திலிருந்த முக்கியமான கொலைகாரர்களில் பெரும்பாலானோர் இராணுவத்துக்கு காசை அள்ளிவிசி எறிந்து எப்படியோ வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி வந்து அப்பாவி தமிழர்கள் என்றபோர்வையில் அகதி தஞ்சம் கோரி பல்வேறு நாடுகளில் அடைக்கலமாகிவிட்டார்கள். இவர்கள் தான் புலிகளின் பெயரில் பல்வேறு அமைப்புகளை தோற்றுவித்து புலம்பெயர் தமிழர்களின் பணங்களை சூறையாடி கொண்டிருப்பவர்கள்.
புலம்பெயர் தமிழர்களின் வீடுகளில் தங்கங்களையும் (பவுண்கள்) களவெடுத்தவர்கள் இவர்கள் தான். இவர்களை தமிழர்கள் இனம் கண்டு அந்தந்த நாட்டு பொலிசாரிடம் காட்டிக்கொடுக்கவேண்டும் அல்லாவிட்டால் பணத்துக்காக இவர்கள் எதையும் செய்வார்கள்.
புலம்பெயர் தேசங்களில் இவர்கள் செய்யும் கொலைகள், கொள்ளைகள், சுத்துமாத்துகள், கலாச்சாரச் சீரழிவுகள் போன்ற நாசகார வேலைகளை மறைப்பதற்காக ‘இலங்கை அரசாங்க புலனாய்வாளர்கள்’ தான் இவற்றையெல்லாம் செய்கின்றார்கள் என பொய்யான அறிக்கைகளை தயாரித்து ‘லங்காசிறி’ போன்ற காசுக்காக இயங்கும் இணையதளங்களில் காசை செலுத்தி பிரச்சாரம் செய்வதன் மூலம் ஏற்கனவே புலிகளால் தலை கழுவிவைத்திருக்கும் புலன்மங்கிய தமிழர்களிடையே ஒரு புரளியை பரப்பிவிடுதன் மூலம் தங்களின் செயல்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள்.
பிரான்சு நாட்டுக்குள் இலங்கை புலனாய்வாளர்கள் ஊடுருவி கொலை செய்தவர்களாம் என புலிபினாமி இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது? இது தான் உலகத்திலேயே பெரிய பகுடி. அப்படியானால், வெளிநாடுகளில் ஊடுருவி இலங்கை புலனாய்வு துறையினர்கள் வேலைசெய்கின்ற போது ‘புலிகளுக்கு காசு சேர்த்தவர்கள், புலிகளின் ஊர்வலங்களுக்கு சென்றவர்கள், புலிகளுக்கு காசுகொடுத்தவர்கள் எப்படி பயமில்லாமல் நாட்டுக்கு போய்வருகிறார்கள்?
புலிகளுக்காக வேலை செய்தவர்கள் அனைவரும் ( சும்மா நோட்டீஸ் கொடுக்கப் போனவர்கள், ஊர்வலங்களுக்கு போனவர்கள், காசுகொடுத்தவர்களை தவிர ) புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பிழைத்து சுகுசான வாழ்க்கை வாழ்ந்துவிட்டார்கள். அவர்களால் இனிமேல் பணமில்லாமல் வாழமுடியாது. பணம்தேடுவதற்காக புதிய புதிய வழிகளை தேடிக்கொள்கிறார்கள்.
ஏற்கனவே சேர்த்து வைத்த சொத்துகளை பாதுகாக்க வேண்டுமெனில், ஒன்றில் சொத்துக்களை தங்களுக்குள் பிரச்சனை பண்ணாமல் பங்கிட்டுகொள்ளவேண்டும் அல்லது முக்கிய நபர்களை (பரிதி போன்ற) போட்டு தள்ளிவிட்டு ஒருபகுதியினரே ‘புலம்பெயர் புலிகளின் சொத்துக்களையும், புலன்மங்கிய கூட்டங்களையும்’ கையகப்படுத்திக்கொள்ளவேண்டும்.
புலம் பெயர் தேசங்களில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இனிமேலாவது சிந்தித்து செயல்பட்டால் வருங்கால சந்ததியினரையாவது காப்பாற்றி கொள்ளலாம்.
பாரிஸில் நடந்த பரிதியின் படுகொலை சம்பந்தமாக புலிப்பினாமி இணையத்தளங்கள் என்னதான் பொய்யை கக்கி புனைந்து எழுதி பிரச்சாரம் செய்தாலும், பிரான்ஸ், சுவிஸ்….ஜெர்மனி.., போன்ற ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் புலிகளின் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகள் யாவற்றையும் விலாவாரியாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.
பாரிஸில் நடந்த பரிதியின் படுகொலை கொலை சம்பந்தமாக சுவிஸ் , பிரான்ஸிலிருந்து வெளிவரும் முக்கியமான பத்திரிகைகளில் வந்த செய்திகளை கீழே தருகின்றோம் வாசித்து பாருங்கள்…