வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவிதத்தில்
தமிழ்க்கைதி ஒருவரும் முஸ்லிம் கைதிகள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
வெலிக்கடைச் சிறையில் பலியான கைதிகளின் விரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் பண்டாரவளையைச் சேர்ந்த ராமநாதன் பாலபெருமான் என்ற
தமிழ்க்கைதியொருவரும் அடங்குகின்றார்.அத்துடன் முஸ்லிம் கைதிகள் மூவரும்
பலியாகியுள்ளனர்.
இதே வேளை இந்த 27 பேரினதும் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்
அவற்றில் 22 பேரின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகளின் பின்னர் அச்சடலங்கள்
நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள சடலங்களின் விபரங்கள் வருமாறு,
01. தொன் கயந்த புஷ்பகுமார (நுகேகொடை)
02. கமகே சமந்த பெர்ணான்டோ
03. குலவெல விதானகே தொன் சமீர மலித் விஜேசிங்க (தெஹிவளை)
04. தேவராஜா மல்வரகே சுகத் குமார (களுபோவில)
05. ரணசிங்க ஆராச்சிகே ஜனக வசந்த (ஹொரண)
06. அசித்த சஞ்ஜீவ திஸாநாயக்க (கிராண்ட்பாஸ்)
07. திலுக் சஞ்ஜீவ ராஜபக்ஷ (கல்கிசை)
08. ராமநாதன் பாலபெருமான் (பண்டாரவளை)
09. அசரப்புலிகே ஜோதிபால எனும் கபில (கிராண்ட்பாஸ்)
10. மலிந்த நிலேத்திர பெல்பொல எனும் மாலன் (கோட்டை)
11. ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா எனும் மஞ்ஜூ ஸ்ரீ (பிலியந்தலை)
12. நிர்மல அத்தபத்து (பிலியந்தலை)
13. துஷார சந்தன எனும் களு துஷார (நாவின்ன)
14. சுசந்த பெரேரா (ரத்மலானை)
15. மொஹமட் விஜேரோஹன எனும் குண்டு (பொரளை)
16. மலித் சமீர பெரேரா எனும் கொன்ட அமித் (தெஹிவளை)
17. திஸ்ஸ குமார (கேகாலை)
18. லெஸ்ட டி சில்வா (ஹிக்கடுவ)
19. சலால்திஸ் மொஹமட் அஸ்வதீன் (கொழும்பு 12)
20. வெலிகம துப்பெஹிகே அசங்க உதயகுமார
21. வல்லகே லலத்த விஜேசிறி (காலி)
22. ரத்னவீர படபெதிகே வெஸ்லி (காலி)
23. சரத் விஜேசூரிய (கல்கமுவ)
24. சபு பிரசன்ன டி சில்வா (இரத்மலானை)
25. மொஹமட் ரம்சதீன் தௌபர் (அக்கரைப்பற்று)
26. கன்னலு பெருமாராச்சிகே பிரியந்த (கரத்தெனிய)
27. லியனாராச்சிகே அநுர (பொரலஸ்கமுவ)
இதே வேளை சிறையிலிருந்து தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறைஅதிகாரிகள்
இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. ஆயினும் தமிழீழ விடுதலை புலிகளான சந்தேக
நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை
சிறைச்சாலையின் சப்பல் வார்ட் மற்றும் எல் மண்டபம் ஆகியவற்றில் விசேட
அதிரடிப்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை
முடிந்து இரண்டொரு நிமிடங்களில் கலவரத்தை தூண்டி விட்டவர்களை கண்டறிவதற்காக
விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில்
இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.
சிறையிலிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்ற போது அவ்விடத்துக்கு முச்சக்கர
வண்டியும் வேனும் எவ்வாறு வந்தன என்பதையிட்டும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இருப்பினும் இந்த முயற்சிகள் தோல்வி கண்டன. கலவரத்தின் தப்பி
சென்றவர்களில் ஏழு பேர்
பொலிஸில் சரணடைந்துள்ளனர். அத்துடன் தப்பிச் சென்றவர்களை தேடும்
நடவடிக்கைகளை பொரளை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளில்
மேற்கொள்ளப்படுகின்றன.
எல்மண்டபத்திலிருந்த கைதிகள் சுவரில் துவாரத்தையிட்டு அதனூடாக தப்பி போனதாக
விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இதுவே ஆயுத மோதலுக்கு வழி
வகுத்துள்ளது என கூறப்படுகின்றன. இங்கிருந்து கடுங்குற்றமிழைத்த பலர்
தப்பி சென்றுள்ளனர். அதே சமயம் இவர்கள் றைபில் ரக துப்பாக்கிகள் 82 யையும்
அரை தன்னியக்க துப்பாக்கிகளையும் கைப்பற்றினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.