இங்கிலாந்துக்கு எதிரான ரெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான ரெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தது. டிராவிட், லட்சுமண் ஓய்வுக்கு பிறகு அணியை நிலை
நிறுத்துவது அவசியமானது. எந்த வெற்றியாக இருந்தாலும் தொடரை வெல்வது மிகவும்
சிறப்பானதாகும்.
டோனி அணி நட்சத்திர வீரர் தெண்டுல்கரை மட்டும் அதிகமாக நம்பி இருக்கக்
கூடாது. சச்சின் அனைவரது ஈர்ப்பு மையமாக உள்ளார். அவர் ஒரு முக்கியமான
வீரர். ஆனால் இடை வீரர்கள் தெண்டுல்கரை நம்பி இருக்கக்கூடாது. அவர்கள்
பொறுப்புடன் விளையாட வேண்டும். அணியை நிலை நிறுத்த இளம் வீரர்களுக்கு இது
சரியான நேரம்.
அவர்கள் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஷேவாக்கும், காம்பீரும்
சிறந்த வீரர்கள் ஆவார்கள். கடந்த 15 ரெஸ்டுகளில் அவர்கள் சிறப்பான
தொடக்கத்தை கொடுக்கவில்லை. ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை
வெளிப்படுத்துகிறார்கள் என்று கருதியே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிறப்பாக ஆடாவிட்டால் அணி தடுமாறும். நமது தொடக்கம் பலவீனமாக
உள்ளது. சிறந்த தொடக்கம் கிடைத்தால் இங்கிலாந்துக்கு எதிராக நம்மால்
ஆதிக்கம் செலுத்த இயலும். ஜாகீர்கானும், ஹர்பஜன் சிங்கும் தற்போது பந்து
வீச்சில் நல்ல நிலையில் இல்லை என்றாலும் தொடரை வெல்வது தான் சிறப்பானது.
ஆடுகள தன்மை மாறக்கூடிய பிட்சில் நாம் விளையாடும் போது `டாஸ்´ முக்கிய
பங்கு வகிக்கும்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.