கனனேடிய சீனர்கள் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து விரும்பி இறக்குமதி
செய்யும் மீன்களில் ஒன்றுதான் சாச்சைக்குரிய பாம்புத் தலை மீனாகும். இதன்
இறக்குமதி வட அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள போதும் சாப்பாட்டுப்
பிரியர்களான சீனர் உயிருடன் வேற்று மீன்களை இறக்குமதி செய்தும் போது
இவற்றையும் களவாகக் கொண்டு வந்து விடுகின்றனர்.
|
இப்படிப்பட்ட மீன்களை கொண்டுவருபவர்களையும் அவற்றை அமெரிக்காவிற்கு
கடத்துபவர்களையும் பிடிப்பதற்கான மறைமுக நடவடிக்கையொன்றில் வசமாகக்
மாட்டிக் கொண்ட ரொறன்ரோ மார்க்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 60 நாட்கள்
சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளதுடன், 90 ஆயிரம் டொலர்கள் அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மீற்றர் வரை வளரும் இந்த மீன்கள் மிகவும் ஆபத்தானவை. மற்றைய மீன்கள்
எதனையும் வாழ விடமாட்டா. மற்றைய மீன்களைக் கொண்று விடும். மனிதர்களின் கை
அல்லது கால் விரலோ அகப்பட்டால் அவ்வளவு தான். துண்டாகிய பின்பே விடுமளவு
கொடூரமான மீன்கள் இவை. இவற்றில் உள்ள விசேட திறன் யாதெனில் மற்றைய
மீன்களெல்லாம் தண்ணீரை விட்டு வெளியே வந்து சில நிமிடங்களில் இறந்து
விடும். ஆனால் இந்த மீன்கள் நான்கு நாட்களிற்கு தண்ணீருக்கு வெளியே
வைத்திருந்தாலும் மீண்டும் தண்ணீரைக் கண்டால் போதும் அவை பிழைத்துக்
கொள்ளும்.
இவ்வகையான உயிர் பிழைக்கும் சக்தியுள்ள இந்த தென் கிழக்காசியாவிலிருந்து
கடத்தி வரப்பட்ட மீண்கள் சில அமெரிக்காவின் மாகாண அருவிகளிலும், நதிகளிலும்
காணப்பட்டன. அவற்றை துண்டமாக வெட்டி வீச வேண்டுமென வன நீர் நிலைப்
பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் மூலமே அவை
உயிர்ப்பிழைப்பதைத் தடுக்க முடியும் என்பதாலேயே இந்தக் கருத்துக்
கூறப்பட்டுள்ளது.
|
ஆபத்துமிகுந்த பாம்புத்தலை மீனை கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல அமெரிக்கா உத்தரவு!
Labels:
உலகம்