ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என
கூறியதாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழைச் சேர்ந்த
பெண்ணெருவர் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம்
திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்த ராசலிங்கம் மதனிக்கு என்பவருக்கு எதிராக
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 21 ஆம்
திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கேகாலை பிரதேசத்தில் வைத்து படுகொலை
செய்ய முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யபட்டு,
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை கேகாலை மேல் நீதிமன்றத்தில் நேற்று
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த பெண் மீது பொலிஸார்
மேலும் ஒரு குற்றச்சாட்டை நீதிமன்றில் முன் வைத்துள்ளனர்.ஜனாதிபதியை
படுகொலை செய்வதற்கு 7 கோடி ரூபா அதிகம் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்லவை
படுகொலை செய்வதற்கு 20 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது என்றும் குறித்த
சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இவ்வழக்கு விசாரணை
எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.