க.பொ.த. உயர்தரப் பரீட்சை இஸட் புள்ளி
தரவரிசை தொடர்பாக குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் இப்பரீட்சை பெறுபேறு
மீள்மதிப்பீட்டுக்கு 140,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த
வருடம் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையைவிட இது
இருமடங்காகும்.
மீள்மதிப்பீட்டுக்கு கடந்த 17 ஆம்
திகதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் 140,000 பேர்
விண்ணப்பித்துள்ளனர். கடந்த வருடம் 62,268 பேர் மீள்மதிப்பீட்டுக்கு
விண்ணப்பித்தனர். அவர்களில் 989 பேரின் பெறுபேறுகள் மாத்திரமே
மீள்மதிப்பீட்டையடுத்து மாற்றத்திற்குள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டு 89,503 பேர்
மீள்மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர் அவர்களில் 1026 பேரின் பெறுபேறுகள்
மாற்றப்பட்டன. 2008 ஆம் ஆண்டு 60,667 பேர் விண்ணப்பித்து 4289 பேரின்
பெறுபேறுகள் மாற்றப்பட்டன.