தனது
தலையீட்டில், முன்னேஸ்வரம் காளியம்மன் ஆலயத்திலோ, வேறு எந்த இடத்திலேயோ,
எந்த விலங்கையும் பலியிட அணுசரனை வழங்கவில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா
விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அப்பாவி
விலங்குகளை பலியிட்டு, தேவ ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் அளவில் மனநிலை
பாதிக்கப்பட்டவராக தான் இல்லை எனவும் அப்பாவி விலங்குகளை கொலை செய்வதை
கண்ணால் பார்த்துக்கொண்டு தன்னால் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க
முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னேஸ்வர்
ஆலயத்திற்கு செல்வது விலங்குகளை காப்பாற்றவே அன்றி, பலியிடுவதற்காக அல்ல.
அப்பாவி விலங்குகளை பலியிடாது, தனக்காக பு{ஜை செய்ய பலர் இருப்பதாகவும்
மேர்வின் சில்வா கூறியுள்ளார்.