மத்திய வங்கி குண்டுவெடிப்பு- 16ஆவது ஆண்டு நினைவு இன்று!(சம்பவ படங்கள் இனைப்பு )


இலங்கை மத்திய வங்கியின் மீது விடுதலை புலிகள் இயக்கம் குண்டுத் தாக்குதல் நடத்தி இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தலைமையில் மத்திய வங்கியில் விசேட நினைவு தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் நினைவுப் பலகை ஒன்றும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்க கரும்புலி  ஒருவர் இலங்கை மத்திய வங்கியில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டார்.

இந்த குண்டுத் தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதோடு 400ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மத்திய வங்கி தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட சிலருக்கு 200 வருடங்கள் சிறைதண்டனை விதித்து அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அபயபிட்டிய தீர்ப்பளித்தார்.

              
               Central Bank bombing Colombo 1996
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now