![]() | |
Neduntheevu |
யாழ்.குடாநாட்டின் நெடுந்தீவுப்பகுதியில் இலங்கை அரசு ஜந்து நட்சத்திர விடுதியொன்றினை கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாதம் யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இவ்விடுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கூடிய விகிதாசாரப்படி தனக்கு தமிழ் மக்களது வாக்கு நெடுந்தீவிலேயே வீழ்ந்திருந்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அடிக்கடி கூறிவருவது அனைவரும் அறிந்ததே. தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைய விட நெடுந்தீவிலேயே கூடிய அளவில் விகிதாசாரப்படி வாக்குகள் வீழ்ந்ததென அவர் கூறிவருகின்றார்.
இந்நிலையில் நெடுந்தீவினை சின்ன சிங்கப்பூராக்கப் போவதாகவும் பேசியும் வருகின்றார். சீன நிதி உதவியுடன் நெடுந்தீவில் கார்ப்பெட் வீதிகளை அமைக்க் அவர் திட்டமிட்டள்ளதாகவும் தெரிய வருகினறது.
ஜனாதிபதியின் சிந்தனையினையடுத்து அமைச்சர்கள் பலரும் தமது யாழ்ப்பாண விஜய நிகழ்ச்சி நிரலில் நெடுந்தீவுப் பயணத்தையும் உள்ளடக்கி வருகின்றனர்.
அமைச்சர்கள் என எவரும் எட்டியே பார்த்திராத அப்பகுதிக்கு நேற்று முன்தினம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கா வந்து சென்றுள்ளார்.
மேலும் பலர் இவ்வாறு படையெடுத்து வருகை தரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எனினும் வெறுமனே கடல் வழி போக்குவரத்தினை மட்டும் நம்பியிருக்கும் நெடுந்தீவு மக்கள் தமது பயணத்திற்காக சீரற்ற படகு சேவைகளால் அலைக்கழிக்கப்பட்டே வருகின்றனர்.
உள்ளக வீதிகளென எவையும் இல்லாத நிலையில் வெறுமனே மாட்டு வண்டிகளும் கால்நடையுமாகவே இன்று வரை அம்மக்களது பயணம் அமைந்து விடுகின்றது.
பொருளாதார ரீதியாகவும் மோசமான வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்த வருவதுடன் குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தனித்து விடப்பட்டவர்களாக அவர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.