2012ஆம் ஆண்டில் டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய மட்டத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வார புள்ளி விபரங்களின் படி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு தொற்றினால் பாதிப்படைந்தமை தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அஜித் பட்டுவன்துடாவ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு முடிவடைந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 50 சத வீத அதிகரிப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில், இந்த திட்டத்தை நாடளாவிய ரீதியா மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு தொற்று அதிகம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, கடந்த வருடத்தில் டெங்கு தொற்று காரணமாக 182 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆரேக்கியமான சமூகம் ஒன்றை உறுவாக்குக்குவதற்கு பாடசாலை மாணவர்களை டெங்கு ஒழிப்பு தொடர்பான அறிவூட்டல், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம், இந்த வருடத்தில் உரிய முறையில் நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.