பிரித்தானியாவில் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னர் பிரான்ஸிலும், அதனை தொடர்ந்து கனடாவிலும் இவ்வாறு அஞ்சல் தலைகளில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் உருவப்படம் அச்சிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இந்த அஞ்சல் தலைக்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய அனுமதியை வழங்கியுள்ளதா? என்பது குறித்த விபரங்களை வெயிடப்பட வில்லை.
இதுதொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்கான பணிப்புரைகள் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சை சோர்ந்த பேச்சாளர் சரத் திசாநாயக எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அதேவேளை இந்த நடவடிக்கையுடன் தமிழீழ மாணவர் விடுதலை அமைப்பு பிண்ணனியில் செயற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற அஞ்சல் தலைகள் பிரான்ஸில் வெளியான போது, இலங்கை அரசாங்கம் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.