சிட்னி டெஸ்ட் 2 -௦0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை

இந்திய அணி இன்னிங்ஸ்  மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபத் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  2 -௦0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரு விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் என்ற மூன்றாம் நாள் ஸ்கோருடன் ஆட்டத்தைத் துவக்கிய இந்திய அணி 400 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 4 வது நாளான இன்று காம்பீர் 83 ரன்களுடன் சிடில் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த டெண்டுல்கர் மற்றும் லக்ஷ்மன் ஜோடியின் ஆட்டம் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இந்த ஜோடி 4 வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப் பட்ட டெண்டுல்கர் 80 ரன்களில் கிளார்க் பந்தில் ஆட்டமிழந்தார். லக்ஷ்மன் 66 ரன்களிலும், ஹோஹ்லி 9 ரன்களிலும் டோனி 2 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

அஷ்வின் 62 ரன்களும், ஜாகீர் கான் 35 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹில்பென்ஹாஸ்  5 விக்கெட்களைச் சாய்த்தார். ஆட்டமிழக்காமல் 329 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now