உயர் தர பரீட்சை பெறுபேறு ஒழுங்கீனம் தொடர்பாக 200 முறைப்பாடுகள் வரை கிடைக்க பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்திகளினால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக ஆணையகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெட்டுப்புள்ளி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
இதுதவிர பெறுபேறுகள் அடங்கிய தகவல்கள் உரிய வகையில் வெளியிடப்படவில்லை எனவும் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.

