இந்த நிலையில் குழுவிற்கு உத்தியோகபூர்வமாக நகர முதல்வர் ஏ ஜே எம் முசம்மில் தெரிவு செய்யப்பட்டார்.
வாக்கெடுப்பின் மூலம் பிரதி நகர முதல்வர் டைடஸ் பெரேரா மாத்திரமே தெரிவானார்.
இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நான்கு பேரின் பெயரை பரிந்துரைத்திருந்தது.
அதேநேரம், எதிர்கட்சியின் உறுப்பினரான அசாத் சாலியின் பெயரை மாநகர சபையை ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தமது பரிந்துரை பட்டியலில் உள்ளடக்கியிருந்தது.
இந்தநிலையில், அசாத் சாலியின் பெயர் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டமையை அந்த கட்சியின் உறுப்பினர்கள் எதிர்த்தனர்.
எனவே அவர்கள் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களுக்கு தமது வாக்குகளை அளித்தனர்.
இதன் அடிப்படையில்,, கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு நிதி நிலையில் குழுவிற்கு பெரும்பான்மை அதிகாரம் கிடைக்க பெற்றது.
இதனிடையே, மாநகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து தாம் விலகப் போவதில்லை என்று, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தாம் இன்றுடன் பதவி விலகவிருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.
எனினும் ஜனாதிபதியின் கோரிக்கையைத் தொடர்ந்து, தாம் தமது பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக அசாத் சாலி தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு மாநகர சபையில், மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி விசேட உரையை நிகழ்த்திய போது, குழப்ப நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், தம்மீது எவரும் தாக்குதல் நடத்தவில்லை எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
