தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 4 ஆயிரம் கைதிகள்
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை
ஆணையாளர் நாயகம் டபிள்யூ. கொடிப்பிலி நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.
கடந்த வருடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்கைதிகள்
விடுவிக்கப்பட்டாலும், இம்முறை சுதந்திர தினத்தில் மாத்திரமே கைதிகள்
விடுதலை செய்யப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.நாட்டின் சுதந்திரதினமான
பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை
செய்யப்படுவது வழமை.அந்தவகையில், இந்தவருடம் எத்தனைபேர் விடுதலை
செய்யப்படவுள்ளனர் எனக் கோட்டபோதே, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான
நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை
செய்வதற்கு சில வரையறைகள் உள்ளன. அவற்றினடிப்படையில் சுமார் 4 ஆயிரம்
கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த வருடம் 2600 ஆவது புத்த ஜயந்தி, சுதந்திரதினம், சிறைச்சாலைக்
கைதிகளின் தினம் ஆகியன உட்பட முக்கியமான சில தினங்களில் கைதிகள்
விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்த வருடம் சுதந்திரதினத்தில் மாத்திரமே
கைதிகளை விடுதலை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
|
சுதந்திர தினத்தை முன்னிட்டு 4 ஆயிரம் கைதிகள் விடுதலை
Labels:
இலங்கை
