
இலங்கை
மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்
தொடரில் இரண்டு போட்டிகள் மீதமிருக்க தென்னாபிரிக்க அணி மூன்றுக்கு
பூச்சியம் என்ற கணக்கில் தொடரை தனதாக்கிக் கொண்டது.
இவ்விரு
அணிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில்
தென்னாபிரிக்க அணி டக்வத் லூவிஸ் முறை அடிப்படையில் 4 ஓட்டங்களால் முறையில்
வெற்றி பெற்றது.
இப்போட்டியில்
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு
266 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உபுல் தரங்க 58 ஓட்டங்களையும் நுவன்
குலசேகர 40 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு
267 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்காவின்
இன்னிங்ஸ் மழை காரணமாக 34 ஓவர்களுடன் நிறைவுக்கு வந்தது.
தென்னாபிரிக்க
அணி 34 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை பெற்றது.
மழை தொடர்ந்தும் பெய்ததால் டக்வத் லூவில் முறையில் தென்னாபிரிக்காவிற்கு
வெற்றி வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்க அணி சார்பாக F du Plessis 72 ஓட்டங்களை பெற்று போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
தென்னாபிரிக்க அணி சார்பாக F du Plessis 72 ஓட்டங்களை பெற்று போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
