7000 அடி உயரத்தில் விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது தனது விமானத்திற்கு அருகில் 'சுறா' ஒன்று பறந்துகொண்டிருப்பதைக் கண்டு விமானியொருவர் அச்சமடைந்த சம்பவமொன்று நியூஸிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்விமானத்தை கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த விமானி 5 அடி நீளமான சுறா முறைத்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தன் கண்களை நம்பமுடியாத நிலையில் விமானி திகைத்தார்.
எனினும் வானத்தில் பறந்த நிலையில் இருந்த சுறாவானது தொலைக்கட்டுப்பாட்டுக் கருவியினால் இயக்கப்படும் வாயு அடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருள் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
நியூஸிலாந்தில் நத்தார் காலத்தில் ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட நீச்சல் விளையாட்டு உபகரணங்கள் மிகவும் பிரசித்தமாகவுள்ளன.
இந்த வாயு நிரப்பப்பட்ட 'சுறாக்கள்' விமானங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தமாட்டாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.